Jul 30, 2026
கணபதியின் முதல் பிரத்யேக உள்ளூர் இணையச் செய்தி ஊடகம் – கணபதி டைம்ஸ் (Ganapathy Times) விரைவில்!
கணபதியின் முதல் பிரத்யேக உள்ளூர் இணையச் செய்தி ஊடகம் – கணபதி டைம்ஸ் (Ganapathy Times) விரைவில்!

செய்திகள் மட்டுமின்றி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்கள், அரசு சார்ந்த பொது அறிவிப்புகள், சமூக நலத் திட்டங்கள், பொதுமக்களுக்குப் பயனுள்ள தகவல்கள் மற்றும் உள்ளூர் முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து, நம்பகமான உள்ளூர் தகவல் மையமாக கணபதி டைம்ஸ் செயல்படவுள்ளது.
நமது சமூகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தில், குடிமக்கள் பத்திரிகையியலை (Citizen Journalism) மனப்பூர்வமாக வரவேற்கிறோம். உங்கள் பகுதியில் நடைபெறும் செய்திகள், சமூகச் சேவைகள், கல்வி மற்றும் விளையாட்டுச் சாதனைகள், பண்பாட்டு நிகழ்வுகள், பொதுப் பிரச்சினைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கட்டுரைகள், கருத்துப் பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் பிற பயனுள்ள தகவல்களை எங்களுடன் பகிரலாம். அவை சரிபார்க்கப்பட்டு, பொதுநலன் கருதி வெளியிடப்படும்.
கணபதி டைம்ஸ், உண்மை, துல்லியம் மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு, எந்தவித அரசியல், மத அல்லது தனிப்பட்ட பாரபட்சமும் இன்றி நடுநிலையான செய்திகளை வழங்குவதில் உறுதிபூண்டுள்ளது. இந்திய அரசின் பத்திரிகைப் பதிவாளர் ஜெனரல் (PRGI) அமைப்பில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த இணையச் செய்தி ஊடகம், நம்பகமான மற்றும் பொறுப்பான உள்ளூர் செய்தி வழங்கலை தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், செய்திகள் உங்களைத் தேடி வர விரும்பினால், +91 8428 641006 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு ganapathytimes@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது www.ganapathytimes.in என்ற இணையதளத்தின் வாயிலாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
நமது ஊர்… நமது மக்கள்… நமது செய்திகள்…
உங்கள் பகுதியில் நடைபெறும் நல்ல செயல்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் மக்களின் குரல் அனைவரையும் சென்றடைய வேண்டுமா? அவற்றை எங்களுடன் பகிருங்கள். கணபதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் நம்பகமான உள்ளூர் செய்தி தளத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம். கணபதி டைம்ஸ் – நம் பகுதியின் புதிய குரலாக உங்களுடன் பயணிக்கத் தயாராக உள்ளது.
